» சினிமா » செய்திகள்
கன்னட மொழி விவகாரம்: கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!
சனி 31, மே 2025 12:27:10 PM (IST)
கன்னட மொழி சர்ச்சை விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜார்ஜ் ஜோஜு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம், ஜூன் 5 ஆம் தேதியில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ்மொழியில் இருந்துதான் கன்னடம் உருவானது என்று கூறினார். அவரின் கருத்துக்கு கர்நாடக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கன்னட அமைப்பினரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.
மேலும். அவரின் கருத்துக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர். இல்லையெனில், கர்நாடகத்தில் தக் லைஃப் திரையிடப்பட மாட்டாது என்றும் கூறினர். இருப்பினும், தனது கருத்துக்காக ஒருபோதும் மன்னிப்பு கோர மாட்டேன் என்று கமல்ஹாசன் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் கூறும்போது, நடிகர் கமல்ஹாசனை கன்னட மொழிக்கு எதிரானவர் போன்று மாயத் தோற்றத்தை சித்திரித்து, அவதூறு பரப்புவது முற்றிலும் தவறானது. அவரின் கருத்தைத் தவறான அர்த்தத்தில் பரப்புரை செய்கின்றனர். இந்திய மொழிகள் அனைத்துக்கும் முறையான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துபவர் அவர் என்று தெரிவித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த்: படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 11:55:56 AM (IST)

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

பிரேம்குமார் - பகத் பாசில் இணையும் புதிய த்ரில்லர் படம்: பூஜையுடன் தொடக்கம்!
வெள்ளி 22, மே 2026 4:51:58 PM (IST)

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியை மாற்றிய சன் பிக்சர்ஸ்!
வியாழன் 21, மே 2026 5:12:31 PM (IST)

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

