» சினிமா » செய்திகள்
குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:03:32 PM (IST)
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் தனது அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அஜித் குமார் நடிப்பில் அண்மையில் வெளியாகி உள்ள குட் பேட் அகலி திரைப்படத்தில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ ஆகிய 3 பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் படத்தில் இந்த 3 பாடல்களை பயன்படுத்தியதற்காக தமக்கு இழப்பீடாக ரூ.5 கோடி தரவேண்டும் என்று கூறி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 3 பாடல்களையும் படத்தில் உடனடியாக நிறுத்த வேண்டும், 7 நாட்களுக்குள் படக்குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த்: படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 11:55:56 AM (IST)

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

பிரேம்குமார் - பகத் பாசில் இணையும் புதிய த்ரில்லர் படம்: பூஜையுடன் தொடக்கம்!
வெள்ளி 22, மே 2026 4:51:58 PM (IST)

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியை மாற்றிய சன் பிக்சர்ஸ்!
வியாழன் 21, மே 2026 5:12:31 PM (IST)

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

