» சினிமா » செய்திகள்

எனது விவகராத்தில் கெனிஷாவை இழுக்காதீர்கள்: ஜெயம் ரவி ஆவேஷம்!

சனி 21, செப்டம்பர் 2024 4:39:58 PM (IST)

எனது விவாகரத்து விவகராத்தில் பாடகி கெனிஷாவை இழுக்காதீர்கள் என்று நடிகர் ஜெயம் ரவி கூறினார்.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். செப். 9ஆம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜெயம் ரவியின் முடிவானது கலந்து ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். பாடகி கெனிஷாவுடன் தொடர்பு இருப்பதாக வதந்திகள் கிளம்பியிருந்தன. இந்ந்லையில் பிரதர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் வந்திருந்த ஜெயம் ரவியிடம் பத்ரிகையாளர்கள் இது குறித்து கேள்வியை முன்வைத்தனர். 

அதற்கு ஜெயம் ரவி பேசியதாவது: நான் ஒன்றேயொன்றுதான் சொல்ல விரும்புகிறேன். இதில் யாரையும் இழுக்காதீர்கள். வாழு வாழவிடு. கெனிஷா 600 மேடைகளில் பாடியுள்ளார்கள். தனியாக நின்று வளர்ந்தவர். பல உயிரைக் காப்பாற்றிய ஹுலர் (குணப்படுத்துபவர்). சான்றிதழ் பெற்ற உளவியலாளர். அவரை இப்படி இழுக்காதீர்கள்.

நானும் கெனிஷாவும் இணைந்து வருங்காலத்தில் ஒரு ஹுலிங் சென்டர் (குணப்படுத்தும் மையம்) அமைக்கவிருக்கிறோம். பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதைக் கெடுக்காதீர்கள். அதை யாரும் கெடுக்கவும் முடியாது. தேவையில்லாமல் அவரை இழுக்காதீர்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory