» சினிமா » செய்திகள்

விஜய் இயக்கும் புதிய படத்தில் விஜய்!

வியாழன் 8, டிசம்பர் 2011 12:30:13 PM (IST)

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்து டைரக்டர் விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்க போகிறார். 

வேலாயுதம் படம் வெற்றி பெற்று இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் விஜய்.  அதுமட்டுமல்ல ஷங்கர் இயக்கத்தில், விரைவில் வெளிவர இருக்கும் நண்பன் படம் ரிலீசுக்காகவும் காத்திருக்கிறார்.  இதனிடையே தமிழில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் டைரக்டர் விஜய்யும், நடிகர் விஜய்யும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். 

தற்போது இரண்டு விஜய்யுமே பிஸியாக உள்ளனர். நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும், டைரக்டர் விஜய், விக்ரமுடன் தாண்டவம் படத்திலும் பிஸியாக இருப்பதால், இந்த படங்களை முடித்த பின்னர் இருவரும் இணைவார்கள் எனத் தெரிகிறது. 

இப்படத்தை பிரபல பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார். இப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைக்கிறார்.


மக்கள் கருத்து

மக்களில் ஒருவன்புதன் 14, டிசம்பர் 2011 - 12:13:35 PM | Posted IP 141.0*****

விஜய் என்றாலே வெற்றி.விஜய் + விஜய் என்றால், 2 வெற்றி

அகஸதிங்கள் 12, டிசம்பர் 2011 - 03:05:36 PM | Posted IP 115.2*****

why this kolaveri

vijayசனி 10, டிசம்பர் 2011 - 07:37:59 PM | Posted IP 59.99*****

தளபதி வாழ்க

moorthyவியாழன் 8, டிசம்பர் 2011 - 06:42:10 PM | Posted IP 117.2*****

விஜய் வித் ரிச்சா இன் டைரக்டர் விஜய் movie

SAAIவியாழன் 8, டிசம்பர் 2011 - 06:41:25 PM | Posted IP 117.2*****

கலக்குங்க thalapathy

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory