» சினிமா » செய்திகள்
சர்வதேச அங்கீகாரம் பெற்ற நடிகர் ரஜினிகாந்தின் காலா!
வெள்ளி 21, ஜூன் 2024 3:39:00 PM (IST)

21-ம் நூற்றாண்டின் சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையை ரஜினியின் ‘காலா’ பெற்றுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘காலா’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படத்துக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ‘பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்’ (British Film Institute) நிறுவனம் ‘Sight and Sound’ என்ற பிரபலமான மாத இதழை வெளியிட்டு வருகிறது.
இந்த இதழில், உலகம் முழுவதும் வெளியான இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘ஓல்டு பாய்’, ‘கெட் அவுட்’, ‘ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ்’, ‘அனாடமி ஆஃப் ஹெல்’ உள்ளிட்ட 25 படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் பா.ரஞ்சித்தின் ‘காலா’ திரைப்படமும் இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இது தொடர்பாக BFI-ன் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், "21-ம் நூற்றாண்டின் கால்வாசியை நாம் கடந்துவிட்டோம்.
இந்த மைல்கல்லை அங்கீகரிப்பதற்காக, சிறந்த விமர்சகர்கள் 25 பேரின் உதவியைக் கொண்டு திரையுலக சகாப்தத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த படங்களை பரிந்துரைக்க கோரினோம். எதிர்காலத்தை கடந்தும் பேசப்படக்கூடிய, 2000 முதல் 2024 வரையில் பரவலான கவனம் பெற்ற படங்களை பட்டியலிட கோரினோம். அதன்படி இந்தப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு படம் என்ற ரீதியில் 25 படங்களை தேர்ந்தெடுத்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது! - விஜய்க்கு பார்த்திபன் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 12:33:35 PM (IST)

ஜனநாயகன்' படக் கசிவு விவகாரம்: துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வெள்ளி 1, மே 2026 11:04:13 AM (IST)

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

சல்மான் கான் - நயன்தாரா கூட்டணியின் புதிய படம்: ஈகைத் திருநாளுக்கு வெளியீடு!
சனி 25, ஏப்ரல் 2026 11:55:40 AM (IST)

