» சினிமா » செய்திகள்

குழந்தையின் பெயரை வெளியிட்ட அமலாபால்!

செவ்வாய் 18, ஜூன் 2024 12:24:41 PM (IST)

நடிகை அமலாபாலுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் "வீரசேகரன்” படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால், "சிந்து சமவெளி” படத்தின் மூலம் சர்ச்சைக்குரிய நடிகையாக மாறினார். பின்னர் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த "மைனா” திரைப்படம் இவரது திரை வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

நடிகை அமலாபால் திரை வாழ்க்கையில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது, "தலைவா”, "தெய்வத்திருமகள்” படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அப்போது இப்படங்களின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து 2013ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

நான்கு வருடங்கள் தொடர்ந்த அவர்களது திருமண வாழ்வு, கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு விவாகரத்துடன் முடிவுக்கு வந்தது.இந்நிலையில், கடந்த ஆண்டு தனது 32வது பிறந்தநாளை கொண்டாடிய அமலாபாலிடம் அவரது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய், காதலை வெளிப்படுத்தி அவருக்கு மோதிரம் அணிவித்தார்.

இதையடுத்து, 2023 நவம்பர் 6ஆம் தேதி அமலாபால் – ஜெகத் தேசாய் திருமணம் கொச்சியில் நடைபெற்றது. பின்னர், கடந்த ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக உள்ள செய்தியை அமலாபால் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். ஏப்ரல் மாதம் அமலாபாலுக்கு வளைகாப்பு விழா நடந்தது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில், அமலாபால் – ஜெகத் தேசாய் ஜோடிக்கு ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை அமலாபால் தனது குழந்தையுடன் முதல்முறையாக தனது வீட்டிற்கு திரும்பும் வீடியோ தற்போது டிரெண்டாகி உள்ளது.இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால், ஜூன் 11ஆம் தேதி தனது ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தைக்கு "இலை” என பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

பொதுவாகவே, அமலா பாலுக்கு இயற்கை சார்ந்த விசயங்கள் மீது அதீத ஆவல் என்பதால், குழந்தைக்கு "இலை” என பெயரிட்டுள்ளதாக அனைவரும் கூறி வருகின்றனர். மேலும், அமலாபால்-ஜெகத் தேசாய் ஜோடிக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஆடு ஜீவிதம்’ படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றதோடு, ரூ.100 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory