» சினிமா » செய்திகள்

நடிகர் பிரதீப் விஜயன் மர்ம மரணம்: போலீசார் விசாரணை!

வியாழன் 13, ஜூன் 2024 4:06:47 PM (IST)

சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் நடிகர் பிரதீப் விஜயன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெகிடி, மேயாத மான், மஷ்ரும் மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் பிரதீப் விஜயன். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இவரது நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகத்தில் சென்னை பாலவாக்கத்தில் அவர் வசித்த வந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பிரதீப் விஜயன் உயிரிழந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்ட காவல்துறையினர் இது இயற்கை மரணமா இல்லை தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory