» சினிமா » செய்திகள்

இதுவரைப் பார்க்காத ரஜினியை பார்க்கலாம்: தலைவர் 171 குறித்து லோகேஷ் கனகராஜ்!

சனி 30, மார்ச் 2024 3:46:48 PM (IST)



இதுவரைப் பார்க்காத ரஜினியை ‘தலைவர் 171’ படத்தில் பார்க்கலாம் என்று இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். 

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது. தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டது. அதில் ஏப்.22ஆம் தேதி படத் தலைப்பின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் விருது வழங்கும் விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "இதுவும் 100 சதவிகிதம் லோகேஷ் படம்தான். இதுவரை பார்க்காத ரஜினியை இதில் பார்க்கலாம். அதற்காகத்தான் உழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory