» சினிமா » செய்திகள்

ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் நாட்டு நாட்டு பாடல்..!

புதன் 25, ஜனவரி 2023 10:59:12 AM (IST)95 ஆவது ஆஸ்கர் விருது ஒரிஜினல் பாடலுக்கான நாமினேஷன் பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள, 'நாட்டு நாட்டு நாட்டு' பாடல் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.

திரையுலகினர் மத்தியில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதினை பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் திரை உலகை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இந்த விருதை வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. நடிகர் பார்த்திபன் உட்பட பலர் இதை வெளிப்படையாக மேடைகளில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதின் இறுதி நாமினேஷன் பட்டியல் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் சுமார் 6 விருதுகளின் அடிப்படையில் பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக 'நாட்டு நாட்டு' பாடல் நாமினேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் தான் 'ஆர் ஆர் ஆர்' படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான, கோல்டன் குளோப் விருதை தட்டி தூக்கிய நிலையில், தற்போது ஆஸ்கர் விருதுக்கும் தயாராகி விட்டதாக தென்னிந்திய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.அதேபோல் வட குழுவினரும் படு உற்சாகத்தில் உள்ளனர்.

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர் ஆர் ஆர்' படம் வெளியான நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களான, சீதா ராமராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நாட்டுப்பற்று மற்றும் நட்பினை மையமாகக் கொண்டு, இப்படம் உருவாகி இருந்தது.

இதில் சீதா ராமராஜுவாக ராம் சரணும், கொமரம் பீம் வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்திருந்தனர். ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருதையும் பெறவேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆர் ஆர் ஆர் பட குழுவினருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory