» சினிமா » செய்திகள்
கோவிலுக்குள் அனுமதி மறுப்பு: நடிகை அமலா வருத்தம்
புதன் 18, ஜனவரி 2023 3:58:17 PM (IST)
கேரளாவில் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னணி நடிகையான அமலா பால் உறவினர்களுடன் இக்கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுத்து விட்டனர். அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் மனம் வருந்திய நடிகை அமலா பால், கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் கோவில் வருகை பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவிட்டார். அதில் "திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இதனால் நான் கோவிலுக்கு வெளியே நின்றே சாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன். மக்களை மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களாக மதிக்கும் காலம் வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் நிர்வாகிகள் கூறும்போது, இக்கோவிலில் இதுவரை கடைபிடித்து வந்த நடைமுறைப்படியே நடிகை அமலா பால் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இக்கோவிலுக்கு எராளமானோர் வருகிறார்கள். மாற்று மதத்தவரும் வரத்தான் செய்கிறார்கள். அவர்களை பற்றி வெளியே எதுவும் தெரியாததல் பிரச்சினை இல்லை. நடிகை அமலா பாலை எல்லோருக்கும் தெரியும். அவரை கோவிலுக்குள் அனுமதித்தால் கோவில் நடைமுறையை மீறியதாக சர்ச்சை ஏற்படும். எனவே அவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை, என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது: ரஜினியை சந்தித்த சஞ்சு சாம்சன்!
திங்கள் 13, மார்ச் 2023 4:20:53 PM (IST)

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்!
சனி 11, மார்ச் 2023 5:13:41 PM (IST)

கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி!
வெள்ளி 10, மார்ச் 2023 11:46:38 AM (IST)

வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்: இளையராஜா புகழாரம்!
வியாழன் 9, மார்ச் 2023 3:13:29 PM (IST)

ஜெயிலர் பட இயக்குநருக்கு பரிசளித்த ஜாக்கி ஷெராஃப்
புதன் 8, மார்ச் 2023 4:16:18 PM (IST)

ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படம் : லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு
வியாழன் 2, மார்ச் 2023 11:08:37 AM (IST)
