» சினிமா » செய்திகள்
பார்த்திபன் இயக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!
சனி 14, ஜனவரி 2023 4:38:09 PM (IST)

இயக்குநர் பார்த்திபன் தான் இயக்கப்போகும் புதிய படத்திற்கு ‘52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ தலைப்பிட்டுள்ளார்.
இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘இரவின் நிழல்’. நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவானதாக சொல்லப்பட்ட இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரகிடா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் இயக்கும் புதிய படத்திற்கு ‘52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என தலைப்பிட்டுள்ளார். அகிரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பார்த்திபன் இயக்குகிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மனதை வருடும் மயிலிறகாய் வாழ்த்துங்கள்!” என பதிவிட்டுள்ளார். படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது: ரஜினியை சந்தித்த சஞ்சு சாம்சன்!
திங்கள் 13, மார்ச் 2023 4:20:53 PM (IST)

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்!
சனி 11, மார்ச் 2023 5:13:41 PM (IST)

கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி!
வெள்ளி 10, மார்ச் 2023 11:46:38 AM (IST)

வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்: இளையராஜா புகழாரம்!
வியாழன் 9, மார்ச் 2023 3:13:29 PM (IST)

ஜெயிலர் பட இயக்குநருக்கு பரிசளித்த ஜாக்கி ஷெராஃப்
புதன் 8, மார்ச் 2023 4:16:18 PM (IST)

ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படம் : லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு
வியாழன் 2, மார்ச் 2023 11:08:37 AM (IST)
