» சினிமா » செய்திகள்

வாரிசு, துணிவு இரு படங்களும் வெற்றியடைய வேண்டும் :நடிகர் வடிவேலு பேட்டி

சனி 24, டிசம்பர் 2022 8:16:37 AM (IST)



விஜய் நடித்த வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரு படங்களும் வெற்றியடைய வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது: என்ன மனக்குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் அவை நீங்கிவிடும். வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். 

சினிமா நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். நான் எந்த கட்சியிலும், கூட்டணியிலும் இல்லை. என் கூட்டணி காமெடி நடிகர்கள் வந்தால் இணைந்து நடிக்க வேண்டியதுதான். மாமன்னன், சந்திரமுகி-2, விஜய் சேதுபதியின் புதிய படம் என நிறைய படங்களில் நடித்து வருகிறேன். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிகரமாக 3-வது வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக எனக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் மீண்டும் திரைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம். இவ்வாறு வடிவேலு கூறினார். முன்னதாக கோவிலில் இருந்து வெளியே வந்த வடிவேலுவை ரசிகர்கள், பக்தர்கள் சூழ்ந்து அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். 


மக்கள் கருத்து

முருகன் அடிமைDec 25, 2022 - 01:15:56 PM | Posted IP 106.1*****

திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory