» சினிமா » செய்திகள்

மர்ம தேசம் புகழ் சின்னத்திரை நடிகர் தற்கொலை!

புதன் 5, அக்டோபர் 2022 11:36:13 AM (IST)

மர்ம தேசம் உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1990 காலகட்டங்களில் வெளியாகி அனைவரது மனதிலும் இடம்பிடித்த தொடர்கள் மர்ம தேசம், விடாது கருப்பு, ஜீம் பூம் பா. இந்த தொடர்களில் ராசு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்தவர் லோகேஷ். நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கண்ணுபடப் போகுதய்யா படத்திலும் நடித்துள்ளார். மேலும், 6 அத்தியாயம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ள லோகேஷ், திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு, மர்ம தேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சியில் இயக்குநர், தயாரிப்பாளருடன் லோகேஷ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory