» சினிமா » செய்திகள்

மாரி செல்வராஜ் - உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு நிறைவு

புதன் 14, செப்டம்பர் 2022 10:54:06 AM (IST)



மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.  

‘பரியேறும் பெருமாள்’ ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கிவந்தார். படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. 

’மாமன்னன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.  இதையொட்டி கேக் வெட்டி படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory