» சினிமா » செய்திகள்

கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம் - படக்குழு அறிவிப்பு

வியாழன் 1, செப்டம்பர் 2022 4:32:15 PM (IST)ர‌சிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கோப்ரா படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.மேலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் கோப்ரா' படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.நீளம் குறைக்கப்பட்ட படமாக இன்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியிடப்படும் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory