» சினிமா » செய்திகள்

யூடியூபில் 25 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக்குத்து பாடல்

வியாழன் 1, செப்டம்பர் 2022 3:07:03 PM (IST)பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் யூடியூபில் 25 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பீஸ்ட் படம் ஏப்ரல் 14-ந்தேதி திரையரங்கில் வெளியானது. அதிரடி, காமெடி கலந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதில், முதல் பாடலான அரபிக்குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, யூடியூப்பில் சாதனையும் படைத்தது. அரபிக்குத்து பாடலுக்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

இதில் இடம் பெற்ற விஜயின் நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இதன்படி, அரபிக்குத்து பாடல் யூடியூபில் 25 கோடி பார்வையாளர்களை கடந்து உள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் டுவிட்டரில் அரபிக்குத்து, விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory