» சினிமா » செய்திகள்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம்: புதிய போஸ்டர் வெளியீடு!
புதன் 24, ஆகஸ்ட் 2022 10:28:32 AM (IST)

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ’இந்தியன் 2’ திரைப்படத்தின் புதிய தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நிற்கிறது. தயாரிப்பு தரப்பு மற்றும் நடிகர்கள் பிரச்னையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.400 கோடி வசூலைத் தாண்டியதால் தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்துக்காக அமெரிக்காவில் ஒப்பனைக் கலைஞர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய தோற்றப் போஸ்டரைப் ’ஹி இஸ் பேக்’(he is back) என்கிற வசனத்துடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் இந்தியன் தாத்தா கதாபாத்திரமான சேனாதிபதியின் தோற்றம் இடம்பெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகள் செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு பெயர் அறிவிப்பு...!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:27:33 PM (IST)

கே. விஸ்வநாத் மறைவு திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதல்வர் ஸ்டாலின்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:41:15 PM (IST)

அஜித்தின் துணிவு பிப்ரவரி 8-ல் ஓடிடியில் ரிலீஸ்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:17:25 PM (IST)

ஒழுங்கா போய் வேலைய பாரு..' ரசிகருக்கு அறிவுரை கூறிய நடிகர் ரஜினிகாந்த்..!
புதன் 1, பிப்ரவரி 2023 5:32:12 PM (IST)

விஜய் - லோகேஷ் கூட்டணி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:42:07 AM (IST)

பழம்பெரும் சன்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைவு : ரஜினிகாந்த் இரங்கல்
வெள்ளி 27, ஜனவரி 2023 10:56:22 AM (IST)
