» சினிமா » செய்திகள்

காமெடி படத்தில் 5 கெட்அப்பில் நடிக்கிறார் சந்தானம்!

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 10:12:20 AM (IST)

இயக்குநர் கோவர்தன் இயக்கும் காமெடி படத்தில் புதிய படத்தில் 5 கெட்அப்புகளில் சந்தானம் நடிக்க உள்ளார். 

காமெடியனாக இருந்த சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து அவர் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். எந்த படத்திலும் காமெடி கேரக்டரில் நடிக்கவில்லை. இனி அதுபோல் நடிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார். கடைசியாக குலு குலு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் துப்பறியும் நிபுணராக சந்தானம் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கோவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் சந்தானம் 5 கெட்அப்புகளில் நடிக்க உள்ளார். 

படத்தின் கதைக்காக ஐந்து வெவ்வேறு கெட்அப்புகளில் அவர் வந்தாலும், இதில் 5 வேடம் கிடையாதாம். ஒரே வேடத்தில்தான் நடிக்கிறார். இது காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேன்டஸி படமாக உருவாக உள்ளது. இதில் நடிக்கும் ஹீரோயின், மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் ஆகியோருக்கான தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory