» சினிமா » செய்திகள்
வீடுகளில் அனைவரும் தேசியக் கொடியை ஏற்றுவோம்” - ரஜினி வேண்டுகோள்
சனி 13, ஆகஸ்ட் 2022 3:22:00 PM (IST)
''நம் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நன்றி செலுத்துவோம்'' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ''இந்த ஆண்டு நம் நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் எல்லோரின் ஒற்றுமையை காட்டும் விதமாக, நம் இந்திய நாடு சுதந்திரம் அடைய எத்தனையோ வருடங்கள், பல லட்சம் பேர் சித்ரவதை அனுபவித்துள்ளனர். எத்தனையோ பேர் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வரும் 15-ம் தேதி சாதி, மத, கட்சி வேறுபாடில்லாமல், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் 2 அடி அல்லது 3 அடி கொம்புகளில் தேசியக் கொடியைக் கட்டி நம் வருங்கால சந்ததியினரான குழந்தைகள், இளைஞர்கள் கையில் நம் வீடுகளின் முன்னால் கொடியை பறக்கவிட்டு பெருமைப்படுவோம். நாடு இல்லாவிட்டால் நாம் இல்லை. நாம் இந்தியர்கள் என்பதில் பெருமைகொள்வோம். ஜெய்ஹிந்த்'' என்று தெரிவித்துள்ளார்.