» சினிமா » செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கங்களைக் குவித்த அஜித்!

சனி 30, ஜூலை 2022 4:17:27 PM (IST)


திருச்சியில் நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் குமார்  4 தங்க பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார். 

திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார். அவர் 10மீ, 25மீ, 50 மீ துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்றார். முன்னதாக திருச்சி வந்த அஜித் குமார் ரசிகர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அவர் 4 தங்க பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளாராம். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.  நடிகர் அஜித் குமார் நடிகராக மட்டுமல்லாமல், புகைப்படங்கள் எடுப்பது, கார், பைக் பந்தயங்களில் பங்கேற்பது போன்ற இதர விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory