» சினிமா » செய்திகள்

பிரபல நடிகர் - இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவு : கனிமொழி எம்பி இரங்கல்

புதன் 17, நவம்பர் 2021 4:42:20 PM (IST)

பிரபல நடிகரும், இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு கனிமொழி எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரபல நடிகரும், இயக்குனருமான ஆர்.என்.ஆர். மனோகர் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 61. கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர். மனோகர். 

அதன் பிறகு ‘கோலங்கள்’, விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படங்களுக்கு வசனம் எழுதினார். அப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.2009ஆம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த ‘மாசிலாமணி’ படத்தை ஆர்.என்.ஆர்.மனோகர் இயக்கினார். அதன் பிறகு நந்தா நடிப்பில் வெளியான ‘வேலூர் மாவட்டம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். 

இது தவிர ‘சலீம்’, ‘என்னை அறிந்தால்’, ‘நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘மிருதன்’, ‘கைதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் ஆர்.என்.ஆர்.மனோகர் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று (நவ.17) ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு கனிமொழி எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திரு. என்.ஆர்.இளங்கோ அவர்களின் சகோதரரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. மனோகர் அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory