» சினிமா » செய்திகள்

யாரையும் தாழ்த்தி பேசக்கூடாது: ஜெய்பீம் சர்ச்சை குறித்து சந்தானம் கருத்து

புதன் 17, நவம்பர் 2021 12:49:07 PM (IST)

சிலரை உயர்த்தி காட்டுவதற்காக யாரையும் தாழ்த்தி பேசக்கூடாது என ஜெய்பீம்' சர்ச்சை குறித்து சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார்.

சந்தானத்தின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'சபாபதி'. அறிமுக டைரக்டர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். சபாபதி திரைப்படம் நவம்பர் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'ஜெய்பீம்' சர்ச்சை குறித்து சந்தானத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சந்தானம், யாரை வேண்டுமானாலும் உயர்த்தி பேசலாம், ஆனால் தாழ்த்திப் பேசக் கூடாது. 

இளைஞர் சமூகத்திற்கு நல்ல சினிமாவைத் தர வேண்டும். 2 மணிநேரம் சாதி, மதம், இனம் என அனைத்தையும் மறந்து தியேட்டரில் உட்கார்ந்து மக்கள் படம் பார்க்கிறார்கள். எனில் அதற்கான படமாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் சபாபதி படத்தின் போஸ்டர் போராளிகளை இழிவுபடுத்துவதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சந்தானம், ஒரு காட்சியின் புகைப்படத்தை வைத்து அதனை விமர்சிப்பது சரியாக இருக்காது. படத்தை பார்த்து விட்டு கருத்து சொல்லட்டும் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory