» சினிமா » செய்திகள்

கிராமி விருது: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பரிந்துரை

வியாழன் 21, அக்டோபர் 2021 12:45:30 PM (IST)



சர்வதேச விருதுகளில் ஒன்றான ‘கிராமி’ விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான மிமி திரைப்படத்தின் பாடல்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

லக்‌ஷ்மண் உடேகர் இயக்கத்தில் க்ரீதி சனோன், பங்கஜ் த்ரிபாதி, சாய் தம்ஹான்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான ’மிமி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியானது. பின்  இப்படம் விமர்சகர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

முக்கியமாக படத்தின் கரு அதிகமும் விவாதிக்கப்பட்டதோடு படத்தில் இடம்பெற்ற ‘பரம சுந்தரி’பாடல் இந்தியா முழுவதும் தொடர்ந்து ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘மிமி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை 64-வது ‘கிராமி’ விருதுகளுக்கு அனுப்புவதாக ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ரஹ்மான் சர்வதேச அளவில் 2 ஆஸ்கர் விருது, 2 கிராமி விருது, கோல்டன் குளோப் விருது, ஃபாப்தா விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory