» சினிமா » செய்திகள்

அண்ணாத்த படத்தின்2வது பாடல் நாளை வெளியீடு!

வெள்ளி 8, அக்டோபர் 2021 11:54:46 AM (IST)அண்ணாத்த படத்தின் 2வது பாடல் நாளை (9 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்ணதாத்த படத்தில் ரஜினிகாந்த்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணன் - தங்கை உறவின் மேன்மையை சொல்லும் படமாக அண்ணாத்த இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ், ஜெகபதி பாபு அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் மறைந்த பிரபல பாடகர் பாலசுப்ரமணியம் பாடியுள்ள அண்ணாத்த பாடல் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை விவேகா எழுதியிருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து "சாரக் காற்றே" என்ற பாடல் நாளை (அக்டோபர் 9) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார். இதனை அறிவிக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஊஞ்சல் ஒன்றில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா அமர்ந்து காதலுடன் பார்த்துக்கொள்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory