» சினிமா » செய்திகள்

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் - 5 தொடங்கியது: போட்டியாளர்களின் பட்டியல் விவரம்

திங்கள் 4, அக்டோபர் 2021 5:39:09 PM (IST)விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் - 5 தொடங்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் பிக் பாஸ் 5-வது சீசனுக்கான விளம்பரம் வெளியானது.

இன்று (அக்டோபர் 3) முதல் பிக் பாஸ் சீசன் - 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இந்த 5 சீசனுக்கும் கமல்தான் தொகுப்பாளர்.

இந்த ஆண்டும் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்துப் பலருடைய பெயர்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இம்முறை பிக் பாஸ் போட்டியில் 18 போட்டியாளர்கள் பங்கெடுக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் பட்டியல் இதோ:

* கானா கலைஞர் இசைவாணி

* ராஜு ஜெயமோகன்

* மதுமிதா

* அபிஷேக் ராஜா

* நமீதா மாரிமுத்து

* பிரியங்கா

*அபினய் வாடி

* சின்ன பொண்ணு

* பவ்னி

* நதியா சங்

* வருண்

* இமான் அண்ணாச்சி

* இக்கி பெர்ரி

* ஸ்ருதி

*அக்‌ஷரா

* தாமரை செல்வி

* சிபி சந்திரன்

* நிரூப் நந்தகுமார்


மக்கள் கருத்து

samyOct 4, 2021 - 06:48:48 PM | Posted IP 108.1*****

dubakoor programme

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory