» சினிமா » செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த முதல் பாடல் அக்.4ல் வெளியீடு

சனி 2, அக்டோபர் 2021 11:59:47 AM (IST)ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தில் எஸ்பிபி பாடியுள்ள முதல் பாடல் வருகிற 4ம் தேதி வெளியாக உள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்காக மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல் அக்டோபர் 4-ம் தேதி வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதனிடையே, பல்வேறு வெளிநாடுகளிலும் இந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்களிலும் முழுமையாகத் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியானால் வியாபாரத்தில் பாதிப்பு உண்டாகும் என்பதால் அண்ணாத்த படத்தினை 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அண்ணாத்த படத்தின் வெளியீட்டில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வெளியான போஸ்டரில் தீபாவளிக்கு அண்ணாத்தே படம் ரிலீஸ் அகும் என்பது உறுதியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory