» சினிமா » செய்திகள்

நீட் தேர்வால் எனது குடும்பத்தில் சோகம் : நடிகை சாய் பல்லவி உருக்கம்

செவ்வாய் 28, செப்டம்பர் 2021 3:36:08 PM (IST)

நீட் தேர்வால் தனது உறவினர் தற்கொலை செய்துகொண்டதாக நடிகை சாய் பல்லவி உருக்கமாக தெரிவித்துள்ளார். 

நாக சதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் கடந்த வராம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு சாய் பல்லவி பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, 'மருத்துவம் என்பது கடல் போன்றது. இதில் தேர்வின்போது எதில் இருந்து கேள்விகள் வரும் என்று சொல்ல முடியாது. அதனால் மனதளவில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களும், நண்பர்களும் தான் மாணவர்களுடன் பேசி நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.  என் உறவினர் ஒருவரும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டதால் தற்கொலை செய்துகொண்டார். இத்தனைக்கும் அவர் மோசமான மதிப்பெண் எடுக்கவில்லை. ஆனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதன் காரணமாக அத்தகைய முடிவை அவர் எடுத்திருக்கிறார். 

தற்கொலை செய்துகொள்வது உங்களது குடும்பத்தை ஏமாற்றும் செயல். தற்கொலை செய்துகொள்ளாதீர்கள் என எளிதாக என்னால் பேசி விட முடியும். ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அந்த வலி தெரியும். பதினெட்டு வயது கூட ஆகாத மாணவர்கள் இவ்வளவு இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது வேதனை அளிக்கிறது. மாணவர்களின் வலியை உணர்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

samyOct 4, 2021 - 06:50:00 PM | Posted IP 108.1*****

So- don't read & learn anything- OK

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory