» சினிமா » செய்திகள்

நாய் சேகர்' தலைப்பு சர்ச்சை : சிவகார்த்திகேயன் கருத்து

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 11:23:23 AM (IST)சதீஷ் நடிக்கும் நாய் சேகர் தலைப்பு சர்ச்சை தொடர்பாக சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.

கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'நாய் சேகர்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் வெளியிட்டார் சிவகார்த்திகேயன். மேலும், மீண்டும் வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்துக்கு இந்தத் தலைப்பைக் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் தலைப்பைக் கொடுக்க மறுத்துவிட்டது.

இதனிடையே, கோயம்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். 'நாய் சேகர்' தலைப்பு சர்ச்சை குறித்துக் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், "வடிவேலு சார் மீண்டும் வருவது சூப்பர். 'நாய் சேகர்' தலைப்பு தொடர்பாக சதீஷிடம் பேசினோம். 'ப்ரோ.. படப்பிடிப்பே முடிந்து படமே தயாராக உள்ளது. 'நாய் சேகர்' தலைப்பைப் படம் முழுக்கவே பயன்படுத்தியுள்ளோம். 

இது தொடர்பாக வடிவேலு சாரிடமும் பேசினோம்' என்று சொன்னார். வடிவேலு சார் வேறொரு தலைப்பில் நடிப்பார். சதீஷ் புதிதாக நாயகனாக நடிப்பதால் இந்த மாதிரி ஒரு பெரிய தலைப்பு தேவைப்படுகிறது. வடிவேலு சாருக்கு இந்தத் தலைப்பு எல்லாம் தேவைப்படாது. அவருடைய படத்துக்கு எந்தத் தலைப்பு வைத்தாலும் பயங்கரமாகத்தான் இருக்கும்" என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory