» சினிமா » செய்திகள்

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்

வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி  மரணம் அடைந்தார். 

பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இவர் தமிழில் ரஜினிகாந்தின் சந்திரமுகி, கமல்ஹாசனின் பம்மல் கே.சம்மந்தம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 98 வயதாகும் உன்னி கிருஷ்ணனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இரு தினங்களுக்கு முன்பு கரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். இது மலையாள பட உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory