» சினிமா » செய்திகள்

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு சென்டை மேளம் முழங்க உற்சாக உற்சாக வரவேற்பு

செவ்வாய் 19, ஜனவரி 2021 3:39:48 PM (IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்ற ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்

தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.

இதில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவர் 4-வது இடம் பிடித்தார். இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஒரே பெண் போட்டியாளர் இவர்தான். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்ற ரம்யா பாண்டியனுக்கு குடும்பத்தினரும் ரசிகர்களும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த வீடியோவை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory