» சினிமா » செய்திகள்

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!

செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஒரு மணி நேர காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம், கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போனது.இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. 

இதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.மாஸ்டர் படம் தொடர்பாக இதுவரை 7 ட்ரெயிலர்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். மாஸ்டர் குழுவினரும் படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

ரசிகர்களும் மாஸ்டர் பொங்கல் திருவிழா என ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஒரு மணி நேரக் காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளன. ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக லீக்காகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் லீக்கான காட்சிகளை நீக்கும் பணியில் மாஸ்டர் படக் குழு தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது, மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகளை ஃபார்வர்டு செய்யவோ ஷேர் செய்யவோ வேண்டாம். மேலும் கசிந்த காட்சிகளை பார்த்தால் [email protected] என்ற முகவரியில் எங்களுக்கு பகிருங்கள் என பதிவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory