» சினிமா » செய்திகள்

விஜய் சேதுபதியின் புதிய படம்: கட்டணம் அறிவிப்பு

செவ்வாய் 22, செப்டம்பர் 2020 3:48:28 PM (IST)



விஜய் சேதுபதியின் புதிய படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாகப் பார்ப்பதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் - க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமீபகாலத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற காட்சிகளே டீசரில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 முதல் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாகப் பார்ப்பதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 199 செலுத்தினால் க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Thoothukudi Business Directory