» சினிமா » செய்திகள்

மாஸ்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு?

சனி 12, செப்டம்பர் 2020 5:40:16 PM (IST)



விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படுகின்றன.  பொன்மகள் வந்தாள், பெண்குயின் தொடங்கி நிறைய தமிழ்ப் படங்கள் இதுவரை ஓடிடி-யில் ரிலீஸாகியுள்ளன. தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகவும், அமேசானுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Thoothukudi Business Directory