» சினிமா » செய்திகள்

புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கினார் பாரதி ராஜா !

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 5:24:50 PM (IST)

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகி உள்ளது.

நடிகர் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.  இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகி உள்ளது. 

இதுகுறித்து பாரதிராஜா கூறுகையில், "தாய் சங்கத்தை உடைக்கவோ, பிரித்தெடுக்கவோ இல்லை. கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை திரையுலகினரே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்க உள்ளது. புதிய நிர்வாகிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். என்று தெரிவித்தார்.  மேலும் புதிய சங்கத்தின் பிறப்பு அவசியமாகிறது என்றும் தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா விளக்கமளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory