» சினிமா » செய்திகள்

ரஜினி இ பாஸ் பெற்றாரா? மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்

புதன் 29, ஜூலை 2020 11:52:54 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றுத்தான் கேளம்பாக்கம் சென்றார் என  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன், லம்போர்கினி காரில் கேளம்பாக்கதிற்கு சென்று வந்தார். மேலும் பண்ணை வீட்டில் அவருடன் மகள் சவுந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் வேத் ஆகியோர் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும், ரஜினி கார் ஒட்டிய அந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

அதேசமயத்தில், ரஜினி இ-பாஸ் எடுத்துதான் சென்றாரா என பலரும் கேள்வி எழுப்பிவந்தனர். இதன்காரணமாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பது பற்றி ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் இ பாஸ் எடுத்துதான் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் சென்றார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அவர் இ பாஸ் பெற்றது ஆய்வின் முடிவில் தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory