» சினிமா » செய்திகள்

சென்னையில் பணம் வைத்து சூதாட்டம்: பிரபல நடிகர் உட்பட 13பேர் கைது!!

செவ்வாய் 28, ஜூலை 2020 12:26:17 PM (IST)

சென்னையில் பணம் வைத்து சீட்டு விளையாடிய விவகாரத்தில் நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். 

12 பி, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே,லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் ஷாம். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து நேற்றிரவு ஷாம் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை கால்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யபட்டன. பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory