» சினிமா » செய்திகள்

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஒலிவியா மறைவு : இரு முறை ஆஸ்கர் வென்றவர்

திங்கள் 27, ஜூலை 2020 5:42:09 PM (IST)ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஒலிவியா டி ஹவில்லேண்ட் 104 வயதில் காலமாகியுள்ளார். 

1935 முதல் 1979 வரை திரையுலகில் தொடர்ந்து நடித்து வந்தார் ஒலிவியா. 49 படங்களில் நடித்த ஒலிவியா, டூ ஈச் ஹிஸ் ஓன் மற்றும் தி ஹியர்ரெஸ் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். கடைசியாக 2009-ல் நடித்தார். 1966 முதல் 1988 வரை தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். எர்ரோல் ஃபிளின்னும் ஒலிவியாவும் 8 படங்களில் ஜோடியாக நடித்து சிறந்த திரை ஜோடிகளாகப் பெயர் பெற்றார்கள்.  அவருடைய மறைவை செய்தித்தொடர்பாளர் லிசா அறிவித்துள்ளார். பாரிஸில் உள்ள தனது வீட்டில் தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துள்ளது.ஒலிவியாவின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory