» சினிமா » செய்திகள்

கரோனாவிலிருந்து குணமடைந்த ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா டிஸ்சார்ஜ்

திங்கள் 27, ஜூலை 2020 5:24:04 PM (IST)

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நடிகை ஐஸ்வர்யா ராய், மற்றும் அவரது மகள் ஆராத்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11 அன்று கரோனா தொற்று உறுதியானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரைத் தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அமிதாப் பச்சன் - அபிஷேக் பச்சன் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யா ராய் - ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.  ஆனால், சில தினங்களுக்கு பிறகு அதாவது கடந்த 17 ஆம் தேதி ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததால் ஐஸ்வர்யா, அவரது மகள் ஆராத்யா ஆகியோர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory