» சினிமா » செய்திகள்

வடிவேலுக்கு இம்சை அரசன் போல் சந்தானத்துக்கு பிஸ்கோத் : இயக்குனர் நம்பிக்கை

வெள்ளி 24, ஜூலை 2020 4:51:22 PM (IST)



"வடிவேலுக்கு இம்சை அரசன் படம் போல் சந்தானத்துக்கு பிஸ்கோத் படம் அமையும்" என்று அப்படத்தின் இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.

நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆர்.கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் படப்பிடிப்பை முடித்து விட்டனர். இது சந்தானத்துக்கு 400-வது படம். 18-ம் நூற்றாண்டு உள்பட மூன்று காலகட்டங்களில் நடப்பதுபோல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. 

சரித்திர காலத்து கதையில் ராஜசிம்மன் என்ற மன்னனாக சந்தானம் நடித்துள்ளார். சரித்திர காலத்து ஆடைகள், யானைகள், பல்லக்கு, வாள், கத்தி, போன்றவை பயன்படுத்தப்பட்டு உள்ளன. 30 நிடங்கள் இந்த காட்சிகள் இடம்பெறும் என்றும் இதில் 500 நடிகர், நடிகைகள் சரித்திர கால உடை அணிந்தே நடித்துள்ளனர் என்றும் இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads






Thoothukudi Business Directory