» சினிமா » செய்திகள்

விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் ரூ. 45 லட்சம் கையாடல் : கணக்காளர் மீது புகார்!

சனி 4, ஜூலை 2020 12:03:43 PM (IST)

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்கிற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் நடிகர் விஷால். துப்பறிவாளன், சக்ரா ஆகிய படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் அலுவலகம் சென்னை வடபழனியில் குமரன் காலனியில் உள்ளது. இந்நிலையில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வடபழனி காவல்துறை உதவி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் அலுவலகத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த பெண் ஒருவர் ரூ. 45 லட்சத்தைக் கையாடல் செய்துவிட்டதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேலாளர் புகார் அளித்துள்ளார். 

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி அலுவலகத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த பெண் ஒருவர், சிறிது சிறிதாகப் பணத்தைக் கையாடல் செய்துள்ளார். ஆறு வருடங்கள் பணியாற்றி ரூ. 45 லட்சம் மோசடி செய்துள்ள அந்தப் பெண், கையாடல் பணத்தின் மூலம் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். இதனால் அவர் கோடிக்கணக்கில் பணத்தைக் கையாடல் செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் புகார் மனு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory