» சினிமா » செய்திகள்

அண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது : தயாரிப்பு நிறுவனம் தகவல்

செவ்வாய் 12, மே 2020 6:14:03 PM (IST)

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சிவா இப்படத்தை இயக்கியுள்ளார்.அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறாா்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறாா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில் அண்ணாத்த படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் உருவாகியுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory