» சினிமா » செய்திகள்

விஷாலை சும்மா விடமாட்டேன்: மிஷ்கின் ஆவேசம்

சனி 14, மார்ச் 2020 5:04:12 PM (IST)

விஷாலை ஒரு சகோதரனாக பார்த்தேன். ஆனால் எனக்கு துரோகம் செய்தார். விஷாலை சும்மா விடமாட்டேன் என்று இயக்குநர் மிஷ்கின் கூறினார்.

விஷால் நடிக்கும் துப்பறிவாளன்-2 படத்தை மிஷ்கின் இயக்கினார். படம் பாதி முடிந்த நிலையில் ரூ.5 கோடி சம்பளம் உள்பட பல்வேறு நிபந்தனைகளை மிஷ்கின் விதித்ததாக கூறி, அவரை நீக்கிவிட்டு விஷாலே படத்தை இயக்குகிறார். இந்நிலையில் சென்னையில் பூர்ணா நடித்த ‘கண்ணாமூச்சி’ வெப் தொடர் அறிமுக நிகழ்ச்சியில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசியதாவது: "விஷாலை வைத்து எடுத்த துப்பறிவாளன் படம் பெரிய வெற்றி பெற்றது. 

அந்த படத்தில் 4 நாட்கள் எடுக்க வேண்டிய சண்டை காட்சியை 6 மணிநேரத்தில் எடுத்தேன். துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத சொன்னார். எழுதினேன். அந்த கதை சிறப்பாக வந்துள்ளதாக என்னை பாராட்டினார். நானே படத்தை தயாரிக்கிறேன் என்றும் கூறினார். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. இந்த கதை தயாராக ரூ.35 லட்சம் செலவு செய்ததாக விஷால் தெரிவித்துள்ளார். இதை ஆதாரத்துடன் அவர் நிரூபிக்க தயாரா? 32 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் செலவு செய்தேன் என்று கூறியுள்ளார். 

அதன்படி 32 நாட்களுக்கு ரூ.4 கோடியே 50 லட்சம்தான் ஆகி இருக்கும். ஆனால் ரூ.13 கோடி செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் சொல்வதில் உண்மை இல்லை. விஷாலை ஒரு சகோதரனாக பார்த்தேன். ஆனால் எனக்கு துரோகம் செய்தார். எனது தாயை மோசமாக திட்டினார். தயாரிப்பாளர்கள் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். சினிமா இல்லாவிட்டாலும், எங்கேயாவது உழைத்து என்னால் பிழைக்க முடியும். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். இனிமேல் விஷாலை சும்மா விடப்போவது இல்லை” இவ்வாறு மிஷ்கின் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer EducationThoothukudi Business Directory