» சினிமா » செய்திகள்

ரஜினி அற்புத மனிதர் : இயக்குநர் பாரதிராஜா புகழாரம்

வெள்ளி 13, மார்ச் 2020 5:11:00 PM (IST)

அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறிய நடிகர் ரஜினிக்கு, இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது நாற்பது ஆண்டுகால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ரஜினி என்ற மந்திரத்தை விட, ரஜினி என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். இன்று அந்த மனிதம்  வெளிப்படையாக,  மக்களுக்கு நன்மை  பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.

தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும். ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்.

ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த  மனிதனாக, ரஜினியின் நாணய அரசியலில் அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை அரசனாக ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory