» சினிமா » செய்திகள்

மதுவுக்கு அடிமையாக இருந்தேன்: சுருதிஹாசன் பேட்டி

வியாழன் 10, அக்டோபர் 2019 5:05:44 PM (IST)

காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என நடிகை சுருதிஹாசன் கூறி உள்ளார்.

கமல்ஹாசனின் மகளான நடிகை சுருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்த சுருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தங்களுக்குள் நிலவிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார் சுருதிஹாசன். இந்நிலையில் காதல் முறிவு குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுருதிஹாசன், நான் மிகவும் கூலான நபர். உணர்வுப்பூர்வமானரும் கூட. நல்லவர்கள் நல்ல நேரங்களில் நல்லவர்கள், அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்கள். ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் நிறைய கற்றுக்கொண்டேன், அது ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. இது சினிமா காதல் அல்ல.

ஒரு சிறந்த காதலை தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். அது என்னைத் தேடி வரும்போது இதற்காகத்தான் காத்திருந்தேன் என உலகத்துக்கு அறிவிக்க காத்திருக்கிறேன். ஒரு காலத்தில் நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன். அதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் தான் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்றார்.சுருதிஹாசன் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு கட்டமராயுடு என்ற தெலுங்கு படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory