» சினிமா » செய்திகள்

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் காலமானார்!

புதன் 25, செப்டம்பர் 2019 5:05:21 PM (IST)

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 39.

செகந்திராபாத் யசோதா மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களாக சிகிச்சை எடுத்து வந்தார் வேணு மாதவ். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் கடந்த ஞாயிறன்று வீட்டுக்குத் திரும்பினார் வேணு மாதவ். எனினும் நேற்று அவருடைய உடல்நிலை மோசமானதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், இன்று மதியம், வேணு மாதவ் சிகிச்சை பலனின்றி காலமானார்.

நல்கொண்டா மாவட்டத்தில் பிறந்த வேணு மாதவ், மிமிக்ரி கலைஞராகக் கவனம் பெற்றதால், பட வாய்ப்பைப் பெற்றார். 1996-ல் சமப்ரதயம் என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 150-க்கும் அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஒரு சில தமிழ்ப் படங்களிலும் அவரை் நடித்துள்ளார். நடித்த வேணு, கடைசியாக 2016-ல் டாக்டர் பிரமாநந்தையா ஸ்டூடன்ஸ் என்கிற படத்தில் நடித்தார்.  வேணு மாதவின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory