» சினிமா » செய்திகள்

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

செவ்வாய் 24, செப்டம்பர் 2019 8:44:41 PM (IST)

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்துறையின் தந்தை என்றழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் பெயரில் சினிமா துறையில், சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் தாதா சாகேப் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2018 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் விருதுக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: இரண்டு தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்து, நமக்கு உத்வேகமாக இருந்த அமிதாப் பச்சன், தாதா சாகேப் விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒட்டு மொத்த நாடும் சர்வதேச சமூகமும் மகிழ்ச்சியடைகிறது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory