» சினிமா » செய்திகள்

தீபாவளி ரிலீஸ்: விஜய் - விஜய் சேதுபதி படங்கள் மோதல்

புதன் 10, ஜூலை 2019 5:55:07 PM (IST)

2019 தீபாவளிக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி படங்கள் மோதுகின்றன. 

வாலு, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் இயக்கும் சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜயா வாஹினி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. கமர்சியல் ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு இரட்டை வேடம். 

இது போல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்திலும் விஜய்க்கு இரட்டை வேடம் என்று சொல்லப்படுகிறது. பண்டிகை தினங்களில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது, மற்ற படங்கள் வெளியாவது அரிதே. எப்படியும் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்குத்தான் சந்தையில் முக்கியத்துவம் தரப்படும் என்பதே காரணம்.

ஆனால் தற்போது, விஜய் - விஜய் சேதுபதி என தமிழ்நாட்டில் பிரபலமான இரண்டு நட்சத்திரங்களின் படமுமே தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு, அஜித்தின் விஸ்வாசம் - ரஜினிகாந்தின் பேட்ட என இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. இதை மனதில் வைத்தே வரும் தீபாவளிக்கும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்களை வெளியிடலாம், இரண்டுமே வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு என சம்பந்தப்பட்டவர்கள் நம்புவதாகத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest CakesThoothukudi Business Directory