» சினிமா » செய்திகள்

தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய எஸ்.பி.பி.

திங்கள் 1, ஜூலை 2019 12:11:21 PM (IST)

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் ஓப்பனிங் பாடலை தான் பாடியுள்ளதாக  எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார். 

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ரஜினியுடன் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓப்பனிங் பாடலை தான் பாடியுள்ளதாக  எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory