» சினிமா » செய்திகள்

ஓடாத படங்களுக்கு வெற்றிவிழா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் ஐஸ்வர்யா ராஜேஷ்

புதன் 9, ஜனவரி 2019 11:04:42 AM (IST)

"கனா" திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கோரியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் கனா. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அந்த விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, "இப்போது எல்லாம் வெற்றி பெறாத படத்துக்குக் கூட வெற்றி விழா கொண்டாடுறாங்க” என்று குறிப்பிட்டார்.

உடனே சிவகார்த்திகேயன் எழுந்து கிண்டலாக கொஞ்சம் கீழே வந்துடுங்க என்றார்.  அதனைத் தொடர்ந்து சத்யராஜ் பேசினார். அப்போது, "இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் யாருக்கெல்லாம் நன்றி சொன்னாங்களோ, அதை அப்படியே ஆமோதிக்கிறேன். அவர் இறுதியாக பேசியதைத் தவிர” என்று பேசினார்.ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கனா வெற்றி விழாவில் நான் பேசியது விளையாட்டுக்காகத்தான். நான் எந்தப் படத்தையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. நான் எப்போதும் யாரையும் காயப்படுத்தியதில்லை.

எல்லா படங்களும் வெற்றியடைவே பிரார்த்திக்கிறேன். ஒரு படத்தை உருவாக்கி வெற்றியடையச் செய்வது எவ்வளவு கடினம் என்பதை நான் உணர்வேன். நான் பேசியது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.” என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory