» சினிமா » செய்திகள்

நாளை காலை வெளியாகிறது 2.0 படத்தின் டீசர்

புதன் 12, செப்டம்பர் 2018 7:12:12 PM (IST)

ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தின் டீசர் நாளை (13 ம் தேதி) காலை வெளியாகிறது.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.  நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை காலை 9 மணிக்கு (செப்டம்பர் 13) இணையத்தில் வெளியிடப்படுகிறது. மேலும் சத்யம், பிவிஆர் போன்ற திரையரங்குகளில் 3டிமுறையில் டீசர் வெளியிடப்படுகிறது. 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 13, 2018 - 09:48:37 AM | Posted IP 141.1*****

அவசியம் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads






Thoothukudi Business Directory